Saturday, June 17, 2017

முதல் பட்டதாரி மாணவர் - 2017 கல்வி கட்டண சலுகையை பெறுவது எப்படி?

தமிழகத்தை சேர்ந்த முதல் பட்டதாரி மாணவர்களுக்கு தமிழக அரசு கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கி வருகின்றது. பொறியியல் மாணவர்களுக்கு வருடத்திற்கு 25000 ரூபாயும், கலை அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்திற்கு ஏற்றாற்போல் சலுகை வழங்கப்படுகின்றது.

உங்கள் குடும்பத்திலுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் மட்டும் பட்டதாரி படிப்பு படித்துக் கொண்டிருந்தால் அவர் தன் குடும்பத்தின் முதல் பட்டதாரி என்ற சான்றிதழைப் பெறலாம்.
குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் குறைந்தபட்ச கல்வி கற்றவராகவோ அல்லது கல்வி கற்காதவர்களாக இருக்க வேண்டும். (அதாவது அவர்கள் பட்ட படிப்பு படிக்காதவர்களாக இருக்க வேண்டும்).
(குறிப்பு: உங்கள் குடும்பத்தில் ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்கள் மட்டும்)

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:
உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஈ சேவை மையத்திற்குச் சென்று உங்களுடைய குடும்ப அட்டை (ரேஷன் கார்ட்), ஆதார் அடையாள அட்டை, உங்கள் கல்விச் சான்றிதழ் மற்றும் மற்ற குடும்ப உறுப்பினர்களின் கல்வித்தகுதியின் சான்றிதழ்களின் நகல்களைக் கொண்டு சென்று ஈ சேவை மைய அதிகாரியை சந்தித்து அந்த ஆவணங்களை சமர்ப்பித்தால் அவர் இனையதளம் (ஆன்லைன்) மூலமாக உங்கள் படிவத்தைப் பூர்த்தி செய்து தருவார்.
அப்போது உங்கள் கைப்பேசிக்கு ஒரு குறுந்தகவல் வரும். நீங்கள் அப்படிவத்தையும், மற்ற ஆவணங்களையும் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் ( V. A. O OFFICE ) சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் உங்கள் கைப்பேசி எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வரும். அத்தகவலை எடுத்துச் சென்று நீங்கள் ஈ சேவை மையத்தில் குடும்பத்தின் முதல் பட்டதாரி சான்றிதழைப் பெறலாம்.
(குறிப்பு: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது முதல் பட்டதாரி மாணவரா என்ற கேள்விக்கு "ஆம்" என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்)
முதல் பட்டதாரி சான்றிதழை விண்ணப்பத்தின் போது இணைக்காதவர்கள் கலந்தாய்வின் போது சான்றிதழை சமர்பித்து கொள்ளலாம்

No comments:

Post a Comment