Thursday, March 30, 2017

''தமிழ் தேர்வில் அரியானாவை சேர்ந்தவர்கள் முதலிடம் தபால்துறை பணியாளர் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு: தமிழக மாணவர்கள் எதிர்ப்பு எதிரொலி''

தபால்துறை தமிழ்நாடு சர்க்கிளுக்கு உட்பட்ட பணியிடங்களுக்கான தேர்வு அண்மையில் நடந்தது. பொது அறிவு, கணக்கு, ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்வுகள் நடந்தன.
ஒவ்வொரு பிரிவுக்கும் 25 மதிப்பெண்கள். தமிழ் பிரிவில் நடந்த தேர்வில் எழுவாய் தொடர், வினைத்தொடர், கலவை, கூட்டு வாக்கியங்கள், வாக்கிய மாற்றங்கள், அணிகள் பழமொழிகள், வட்டார வழக்கில் உள்ள சொற்றொடர்கள் என கேள்விகள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.தேர்வு முடிவு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்த தேர்வில் தமிழில், தமிழக மாணவர்களை விட, குறிப்பாக தமிழை தாய்மொழியாக கொண்டவர்களை விட அரியானாவை சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பிடித்திருந்தது தமிழக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரியானாவை சேர்ந்த மாணவர்கள் 25க்கு 24, 22 மதிப்பெண்களும், தமிழக மாணவர்கள் 10, 15 மதிப்பெண்களும் பெற்றதாக முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருநதது.
இது மத்திய அரசின் பிற துறைகளை போலவே தபால் துறையிலும் தமிழகத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க நடக்கும் சதியாகும் என்று தமிழக மாணவர்கள் வேதனை தெரிவித்தனர். இதுதொடர்பாக தபால் துறையின் தமிழ்நாடு சர்க்கிள் தலைமையகத்துக்கும், தபால்துறை அமைச்சகத்துக்கும், கலெக்டர்களுக்கும் தமிழக மாணவர்கள் புகார் அளித்தனர்.இதையடுத்து கடந்த வாரம் தமிழக சர்க்கிளில் அந்தந்த அஞ்சல் கோட்டங்களில் நடப்பதாக அறிவிக்கப்பட்ட ‘ஸ்கிரீனிங் டெஸ்ட்’ என்ற இறுதி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு சர்க்கிளுக்கு உட்பட்ட தபால்துறை காலி பணியிடங்களுக்கு நடந்த தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பதாக தபால்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் இதுதொடர்பாக இறுதி அறிவிப்பு தபால் துறையின் தமிழ்நாடு சர்க்கிள் தலைமையகத்தில் இருந்துதான் வரும்
என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment