Wednesday, May 10, 2017

’நீட்’ தேர்வு அத்துமீறல்; 4 ஆசிரியைகள் ’சஸ்பெண்ட்’

 கேரளாவில், ’நீட்’ எனப்படும், தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியரிடம், சோதனை என்ற பெயரில் மிகக் கடுமையாக நடந்து கொண்ட, நான்கு ஆசிரியைகள், ’சஸ்பெண்ட்’ செய்யப் பட்டுள்ளனர்.

’நீட்’ எனப்படும், தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும், ஞாயிற்றுக் கிழமை நடந்தது. அப்போது, கேரளா, தமிழகம் உட்பட, பல்வேறு மாநிலங்களில், தேர்வு எழுத, தேர்வு மையங்களுக்கு வந்த மாணவ, மாணவியரிடம், கண்காணிப்பாளர்கள் மிகக் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

முழுக்கைச் சட்டை அணிந்த மாணவர்கள், கம்மல், மூக்குத்தி, கால் கொலுசு அணிந்து வந்த மாணவியர், தேர்வு அறைக்குள் அனுமதிக்கப் படவில்லை. இதனால், முழுக் கைச் சட்டையை பல மாண வர்கள், அரைக்கை சட்டையாக பிளேடால் வெட்டிக் கொண்டு, தேர்வு எழுதச் சென்றனர்.

மாணவியர், கம்மல், மூக்குத்தி, கொலுசு போன்றவற்றை கழற்றி, பெற்றோரிடம் தந்து விட்டு புலம்பியபடி, தேர்வு எழுதினர்.

விசாரணை

கேரளாவில், கண்ணுாரில் உள்ள ஒரு தேர்வு , மையத்தில், ஒரு மாணவியின் உள்ளாடையில் உலோகத்தாலான கொக்கி இருந்ததால், அதை கழற்றினால்தான் தேர்வு எழுத அனுமதிப்பேன் என, ஒரு கண்காணிப்பாளர் கண்டிப்பாக கூறிய சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யது. இது தொடர்பாக, பெற்றோர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறினர். 

இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.எஸ்.இ., நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு, கேரள மாநில குழந்தைகள் உரிமைக் கமிஷன், ’நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது. கேரள மாநில மனித உரிமைக் கமிஷன், தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

உள்ளாடையை கழற்றச் சொன்ன சம்பவம் குறித்து,உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என, மனித உரிமை கமிஷன் வலியு றுத்தி உள்ளது.

இந்த நிலையில், கண்ணுாரில், ’நீட்’ தேர்வு நடந்த ஒரு பள்ளியின் முதல்வர் ஜமாலுதீன், நிருபர் களிடம் நேற்று கூறியதாவது:’நீட்’ தேர்வு கண் காணிப்பாளர்களின் அத்துமீறல்கள் தொடர் பாக, முறையான புகார், எங்களுக்கு வரவில்லை. 

இருப் பினும், ’நீட்’ தேர்வு எழுத வந்த மாணவியரி டம் மிக மோசமாக நடந்து கொண்ட, நான்கு ஆசிரி யைகள், ’சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர். அவர் களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

சட்டசபையிலும் எதிரொலித்தது

தேர்வு கண்காணிப்பாளர்களின் அத்துமீறல் சம்பவங்கள் குறித்த விவாதம், கேரள மாநில சட்டசபையிலும் எதிரொலித்தது.

அப்போது, மார்க்.கம்யூ., கட்சியை சேர்ந்த, மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது

தேர்வு மையத்தில், கண் காணிப்பாளர்கள் அத்துமீறி நடந்து கொண்டது குறித்து, மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த சம்பவங்கள் குறித்து, தக்க விசாரணை நடத்தும்படி போலீஸ்அதிகாரிகள் கேட்டு கொள்ளப் பட்டுள்ளனர். 

மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்து சட்ட நடவ டிக்கை எடுக்கப் படும். பாதிக்கப்பட்ட மாணவி யின் பெற்றோரை நேரில் சந்தித்து பேசும் படி, போலீஸ் அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டுள் ளது.இவ்வாறு அவர் பேசினார்.

அதீத ஆர்வக்கோளாறு!

கேரளாவில், ’நீட்’ தேர்வுஎழுதசென்ற மாணவியின் உள்ளாடையை கழற்றச் சொன்ன கண் காணிப்பாளர், அதீத ஆர்வக் கோளாறால் அவ்வாறு நடந்து கொண்டதாக, சி.பி.எஸ்.இ., விளக்கம் அளித்துள்ளது. 

சி.பி.எஸ்.இ., எனப் படும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், நேற்று கூறியதாவது:

கேரள மாநிலம், கண்ணுா ரில், நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன சம்பவம், துரதிருஷ்ட வசமானது. அதீத ஆர்வக் கோளாறால், அந்த அதிகாரி அவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.
 
இந்த சம்பவத்தால், மாணவியருக்கு ஏற்பட்ட அசவுகரியங்களுக்கு, சி.பி.எஸ்.இ., வருத்தம் தெரிவிக்கிறது.தேர்வு நடப்பதற்கு முன்பே, முறைகேடுகளை தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, எஸ்.எம்.எஸ்., - இ-மெயில், அனுமதி அட்டை, இணையதளங்கள் உள்ளிட்டவற்றில், விளக்கமாக தெரிவிக் கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வின் முக்கி யத்துவம் கருதி, எந்த வகையிலும், முறைகேடுகள் நடக்கக் கூடாது என்ற எண்ணத்திலும், நேர்மை யான மாணவர் களுக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் மட்டுமே, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.

No comments:

Post a Comment